– பாரதியும் தமிழும்ழ்
கவிஞர்: சுபாஷ் சௌந்தரன்
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
வான் சொந்த பறவைக்கு
காற்றிசை நான்;
மண் சொந்த விலங்குக்கு
விழாப் பா நான்;
பச்சையுண்ணும் பறவைகளுக்கு
பசிப் பா நான்;
நல் எச்சம் உமிழும் உதடுகளுக்கு
உவமை நான்;
இன்ப இகழ்ச்சி முடக்கும்
இதய சூழ்ச்சி நான்;
துன்பக் கடலைக் கடக்கும்
கடைசிப் பா நான்;
ஏற்கா வெறுமையை ஏற்ற
ஏகம் நான்;
மற்றோரின் மனமெல்லாம்
நானில்லை;
நான் என்பதே நான்.