– தமிழ்
கவிஞர்: மகேந்திரன்.க
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
அகரமுதலாய் அமைந்தவளே – எம்
ஆதித் தாயாய் நிலைத்தவளே!
சங்கப் பலகை ஏறியவளே – உயர்
சந்தத் தமிழாய் மலர்ந்தவளே!
குமரிக் கடலின் அலை ஓசை – உன்
கொஞ்சும் தமிழின் உயிர் ஓசை!
இமயம் வரைக்கும் புகழ் மணக்க – நீ
இலக்கிய வானில் ஒளி கொடுக்க!
வள்ளுவன் தந்த திருக்குறளே – உன்
வாழ்வியல் சொல்லும் மணிமகுடம்!
கம்பன் வடித்த காவியமே – உன்
கற்பனை ஊற்றின் பெரும் வடிவம்!
பாரதி கண்ட புதுமையே – உன்
பாய்ச்சல் காட்டும் பெருமையே!
பாவேந்தர் பாடிய அழகே – நீ
பண்பாடு காக்கும் எம் விழியே!
எளியோர் பேசும் தேன் மொழியே
அறிவியல் ஆளும் வான் மொழியே!
கணினித் திரையில் நீ மின்ன – எம்
காதல் தமிழ் அங்கே மின்ன!
பிறமொழி மோகம் துறப்போமே
பெருமைத் தமிழைப் பேணுவோமே!
இனம் காக்க மொழி காப்போம் – நாம்
இணையிலாத தமிழைப் போற்றுவோமே!
வாழ்க தமிழ்! வளர்க அதன் புகழ்!
வையகம் உள்ளவரை நிலைக்க உன் புகழ்!
கார்புகழ் போற்றி நிற்கும் அவையரசி.
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.