– தமிழ்
கவிஞர்: புண்ணகையரசி அரசப்பன்
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
அனைத்து மொழிக்கும் அடியானவள்,
ஆனந்தமாய் செவி நுழைந்தவள்,
இன்ப அமுதானவள்,
ஈன்றெடுக்காது அன்னையானவள்,
உறவாய் உடனிருப்பவள்,
ஊற்றாய் உலகை நிறைத்தவள்,
எத்திசைக்கும் மூத்தவள்,
ஏணியாய் நின்று ஊக்கியவள்,
ஐவகை நிலத்திற்கும் உரியவள்,
ஒன்றாய் அனைவரையும் பிணைப்பவள்,
ஔடதமாய் மனதில் கலப்பவள்,
எஃகாக மனிதரை காப்பவள்.
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.