கவிஞர்: மு.மதிராஜா
📚 ₹1500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
தானத் தனந்தன
தானத் தனந்தன
தானத் தனந் தனனா – தன
தானத் தனந்தன
தானத் தனந்தன
தானத் தனந் தனனா
தொல்குடி தோன்றிய
எம் குடிமக்களின் மூத்தவளானவளே – உயிர்
மூச்சிலும் நீயென
பூரித்த தமிழன்
பூர்வீகம் ஆள்பவளே
முச்சங்கம் அமைத்து
முத்தொளி வீசிடத்
தென்னவனாண்டு வர – உயர்
அன்னைத் தமிழவள்
பண்பினில் வளர்ந்த
பேரறம் வாழ்ந்ததுவே…..
மானிட மாந்தர்கள்
வாழ்வியல் செப்பிடும்
பேரிலக்கியம் அவளே – கவி
பாடவே வந்திங்கு
ஆற்றலும் தந்திட்டு
சீரிலக்கணமாகினாள்
வாய் மொழியே
அவள் தாய் நிலமே
அதிலூன்றி வந்த மரபு – மொழிப்
பாவலர்கள் கையில்
பாவின மாட்சியில்
பாங்குடனே அமர்ந்தாள்
பூமகளாகிய
மேகலையும்
சிலம்பானதோர் காவியமே – அணி
செய்திடுமே
புகழ் சூட்டிடுமே
இளஞ்சூரியனானவளை