தமிழ்
கவிஞர்: அ.பிரான்சிஸ் சோனியா
₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
ஆயிரமாயிரம் மொழிகள் உண்டு அவனியிலே
ஆதாரம் நீயே என் அன்னைத்தமிழே
யுகங்கள் பல கடந்து வந்தாய்
நிகர் உண்டோ உனக்கு நற்றமிழே
பழமையின் பெருமை என்றும் குன்றாமல்
புதுமையில் புகழும் கொண்டாய் பூந்தமிழே
செங்குருதி சிந்திய சீர்மிகு காப்பியங்கள்
ஏராளம் சுமந்து வந்தாய் செந்தமிழே
திருந்திய இலக்கணமும் தேமதுர இலக்கியமும்
கற்றிட ஆயுள்போதுமோ தெவிட்டாத தேன்தமிழே
இயல் இசை நாடகமாய் இதயத்தில்
வேர் விட்டாய் மாண்புமிகு முத்தமிழே
கவிதையாய் செய்யுளாய் காப்பியமாய் இளமனதின்
கற்பனையில் கனிந்திட்டாய் கண்ணான கன்னித்தமிழே
உயிரே உன்னை வளர்த்ததால் அல்லவோ
உயர்ந்தது தென்னாடு தித்திக்கும் தென்தமிழே
உணவே மருந்தென்று இனிய இயற்கையோடு
இணைந்திட்டாய் பார் போற்றும் பைந்தமிழே
கன்னித் தமிழே கணினித் தமிழே
வண்ணத் தமிழே வன்மைத் தமிழே
எண்ணத்தில் வந்துதித்து ஏட்டினில் எழுத்தானாய்
உன்னால் உயர்ந்தேன் உனக்காய் உயர்வேன்
உள்ளத்தில் உன் பெருமை
உணர்ந்தது இந்த தலைமுறை
எல்லைகள் கடந்து தொல்லைகள் தொலைத்து
மெல்லத் தமிழினி மேதினியில் மேன்மையுறும்.
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.