பாரதியும் தமிழும்
கவிஞர்: பாவலர் தனியெழிலன்
📚 ₹750 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசு
கவிதை
என் எழுத்தில் முளைத்தான்
எஃ(கு) எனவே உழைத்தான் – என்
கொழுத்த உடம்பை – தமிழ்
கூவிக் கரைத்தான்…
தொன் புலவனும் இவனே
தோள் மறவனும் இவனே – நல்
தொகையினைத் தந்த – தமிழ்
தோகையும் இவனே!
தாசனுக்காசன் இவனாம்
தமிழே இவனுக்கு மகனாம் – நம்
துன்பம் கரைக்கும் மெழுகாம் – இவன்
தமிழைக் கேட்டல் அறிதாம்!
விடுதலை என்றோர் வேள்வி
விளைந்தது இவனால் வாழ்வில் – தமிழ்
முழங்கிடக் கொட்டிய முரசு- இன
உணர்வினை எழுப்பிய பரிசு.
About The Author
Discover more from thecriticspoetry
Subscribe to get the latest posts sent to your email.